Saturday, September 3, 2011
Friday, September 2, 2011
a trip to rameshwaram and dhanushkodi(ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பயணம்
நான் பல நாட்களாக போக வேண்டும் என்றிருந்த ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி செல்ல பயணமானேன் .எப்போது phc வேலையிலிருந்து தப்பித்து செல்வேன் என்று ஏங்கி இருந்தேன் .இப்போது அது நிறைவேரபோகிறது என்ற மகிழ்ச்சியுடன் கிளம்பினேன் .train ticket முன்பே பதிவு செய்திருந்தேன் .திருச்சியில் இருந்து இரவு 10.30kku கிளம்பினோம் .காலை 5 மணிக்கு ராமேஸ்வரம் போய்ச்சேர்தோம்.ஆனால் பாம்பன் பாலத்தை விடியற்காலையில் சரியாக பார்க்கமுடியவில்லையே என்று வருத்த பட்டேன் .கோயில் அருகே அங்கே மஹாராஜா ஹோடேலில் தங்கினோம்.ரூம் மிகவும் சுமாராகத்தான் இருந்தது அனால்1000ருபாய் அட்வான்ஸ்மட்டும் வாங்கிக்கொண்டார்கள் .காலையில் 6 மணிக்கு எல்லோரும் எழுந்து கிளம்பினோம் .விரைவாக போனால்தான் sunrise பார்க்க முடியும் என்று அப்பா சொன்னதால் சீக்கிரம் கிளம்பினோம் .
வீதிகள் அனைத்தும் எதிர்பார்த்ததைவிட சுத்தமாகவே இருந்தது .அங்கே ஒரு அய்யரை பிடித்து தோஷம் கழிக்க செய்தோம் .வழக்கம்போல் அய்யர் என் பர்சை பதம் பார்த்தார் .ஒவ்வொறு தோசதிர்க்கும் fixed rate .வீட்டில் சொன்னாலும் கேட்கமாட்டார்கள் என்பதற்காக ஒப்புக்கொண்டேன்.பிறகு 21 தீர்தததிலும் குளித்தோம் (அங்கும் நீர் ஊற்ற400 ரூபாய் கொள்ளையடித்தார்கள்-இது கோயில் நிர்வாகத்திற்கு தெரிந்தே நடக்கிறது ) .ஆனால் அந்த அழகான கோயிலும் தீர்த்தங்களும் இவற்றை மரக செய்தது .என்ன ஒரு அருமையான கட்டடக்கலை பார்க்க பார்க்க பரவசமாக இருந்தது.ஈரதுணியுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்பதால் அறைக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு வந்தோம் .இதுவரை பார்த்ததிலேயே அழகான லிங்கம்(ராமநாதசுவாமி)மெய்மறந்து பார்த்தேன் .
பிறகு நீண்ட விவாதங்களுக்கு பிறகு தனுஷ்கோடி செல்ல ஆயத்தமானோம் .எங்கள் நேரமோ என்னவோ அன்று ஆட்டோ strike .டவுன் பஸ்ஸில் செல்ல வெகு நேரம் காத்திருந்தோம் .தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை .;அங்கிருந்து 20கிலோமீட்டர் தூரம் பயணித்து ஓர் இடத்தை அடய்தோம்.அங்கே கடல் மணலில் பயணம் செய்து தனுஷ்கோடி செல்ல தலைக்கு 80ருபாய் வாங்கிக்கொண்டார்கள் .அப்பாடி ஒரு வழியாக டிவியில் பார்த்த அந்த சிதிலமடைந்த கட்டடங்களை பார்க்கும்போது ஒரு பக்கம் பயமாகவும் மறு பக்கம் இறந்து போனவர்களை நினைத்து வருத்தமாகவும் இருந்தது ,அங்கே மன்னர் வளைகுடா என்ற படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது .அந்த வண்டியில் பயணம் செய்தத thriillagavum ஆனந்தமாகவும் இருந்தது,
மாலை 5மணிக்கு train என்பதால் சிக்கிரம் கிளம்பினோம் ,வழியில் அப்துல்கலாம் வீடு கோதண்டராமர் கோயில் பார்த்தோம் .things pack செய்து கிளம்பினோம் .இப்போது பாம்பன் பலத்தை நன்றாக பார்த்தோம் .பயனகளைப்பில் தூங்கி திருச்சியில் வந்து இறங்கி வீடு வந்தோம் .
திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் ஒருவர் சென்று வர ருபாய்1000 செலவாகும்
பார்க்க வேண்டிய இடங்கள் ;ராமநாதசுவாமி கோயில் ,ராமர் பாதம் ,தனுஷ்கோடி ,கோதண்டராமனர் கோயில் ,ஜடாயு தீர்த்தம் அப்துல்கலாம் வீடு
.
http://www.docstoc.com/docs/93065493/rameshwaram-hotel-phone-numbers
Subscribe to:
Posts (Atom)